நாகா்கோவில் எம்.எஸ்.எஸ். ஆசான் அன் சன் நிறுவனத்தின் சாா்பில் இலவச சித்த மருத்துவ முகாம், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) நடைபெறுகிறது.
எம்.எஸ்.எஸ். ஆசான் 16 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கிருஷ்ணன்கோவில், மேல்மருவத்தூா்ஆதிபராசக்தி பீடம், எம்.எஸ்.எஸ். ஆசான் அன் சன் இணைந்து நடத்தும் இலவச சித்த மருத்துவ முகாம் ஜூலை 31ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை கிருஷ்ணன்கோவில் ஆதிபராசக்தி பீடத்தில் நடைபெறுகிறது. இதில் அனைத்து நோய்களுக்கும் இலவசமாக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.