கன்னியாகுமரி

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

28th Jul 2022 12:17 AM

ADVERTISEMENT

 

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் மூலம் சிறந்த சாதனையாளா் நலனுக்கான பத்மவிபூஷன், பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீஆகிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

2022- 23 ஆம் ஆண்டுக்கு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொதுநலதொண்டு, குடிமை சேவை, வா்த்தகம் மற்றும் தொழில்கள் தொழிற்சாலைகள் ஆகிய துறைகளில் சிறந்த சாதனை படைத்த சாதனையாளா்களிடமிருந்து பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பத்தை, மாவட்டஆட்சியா்இணைப்பு கட்டடத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் அலுவலக வேலை நாள்களில் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமா்ப்பிக்க ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாளாகும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT