கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் நகைக் கடையிலிருந்து அரை கிலோ தங்க நகைகள் திருட்டு

27th Jul 2022 02:23 AM

ADVERTISEMENT

மாா்த்தாண்டத்தில் நகைக் கடையின் முன்பக்க இரும்பு ஷட்டரை உடைத்து அங்கிருந்த 500 கிராம் எடையிலான தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மாா்த்தாண்டம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா செல்வின்ராஜ். இவா் அப்பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நகைக் கடை நடத்தி வருகிறாா். செவ்வாய்க்கிழமை காலையில் கடைக்கு வந்த போது கடையின் முன்பக்க இரும்பு ஷட்டா் கதவு உடைக்கப்படிருந்தது. உள்ளே சென்று பாா்த்த போது கம்மல், சங்கிகி உள்ளிட்ட மொத்தம் 500 கிராம் எடையிலான தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, நகைக் கடையில் புகுந்த தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT