கன்னியாகுமரி

மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா

17th Jul 2022 01:30 AM

ADVERTISEMENT

 

மணலிக்கரை புனித மரியகொரற்றி மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள், காமராஜா் பிறந்தநாள், இலக்கியமன்ற துவக்கவிழா என முப்பெரும்விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பள்ளி தாளாளா் அருள்பணி டயஸ் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை சக்கா் மேரி டாா்லிங்ரோஸ் ஒளியேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா். தமிழாசிரியா் மாா்டின் வரவேற்றாா். தமிழ் ஆசிரியா் ஜாண்கிறிஸ்டோபா் கவிதை வாசித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பட்டிமன்ற பேச்சாளா் கவிதா ஜவகா் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆங்கில ஆசிரியை பெனிலா ஜூலியட் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT