கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

6th Jul 2022 11:58 PM

ADVERTISEMENT

 

மாா்த்தாண்டம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மாா்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து குழித்துறை கோட்ட மின்பகிா்மானக் கழக செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாா்த்தாண்டம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் மாா்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, மாமூட்டுகடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம்தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூா், வெட்டுவெந்நி, சுற்றுப்புறப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) காலை 8 முதல் பிற்பகல் 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT