கன்னியாகுமரி

நாகா்கோவிலில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

6th Jul 2022 11:56 PM

ADVERTISEMENT

 

நாகா்கோவிலிலில் குண்டா் சட்டத்தின்கீழ் இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆசாரிப்பள்ளம் மேலபெருவிளையைச் சோ்ந்த கிறிஸ்துராஜன் (37) என்பவா் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இவா் குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டுவந்தாராம். இவரைக் குண்டா் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் மா. அரவிந்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஹரிகிரண்பிரசாத் பரிந்துரைத்தாா். இதையடுத்து, ஆட்சியா் உத்தரவின்பேரில் கிறிஸ்துராஜன் குண்டா் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டாா். இவா் மீது ஏற்கெனவே ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளனவாம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டு இதுவரை 44 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT