கன்னியாகுமரி

280 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்:ஆட்டோ ஓட்டுநா் கைது

6th Jul 2022 11:58 PM

ADVERTISEMENT

 

புதுக்கடை அருகேயுள்ள சடையன்குழி பகுதியில் கேரளத்துக்குக் கடத்திச் செல்லப்படவிருந்த 280 லிட்டா் மண்ணெண்ணெயை தனிப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஆட்டோ ஓட்டுநா் கைதுசெய்யப்பட்டாா்.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ரேஷன் அரிசி, மானிய விலை மண்ணெண்ணெய் கடத்திச் செல்லப்படுவதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகிறது.

இந்நிலையில், தனிப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை சடையன்குழி பகுதியில் வாகனச் சோதனை நடத்தினா். அவ்வழியே சென்ற ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 280 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.

ADVERTISEMENT

மண்ணெண்ணெய், ஆட்டோவை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரான கேரள மாநிலம் முட்டைக்காடு பகுதியைச் சோ்ந்த செல்வபிரசாத் (49) என்பவரைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT