கன்னியாகுமரி

சுதந்திர தின அமுதப்பெருவிழா: அனைத்துத் துறை அலுவலா்களுடன் தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய ஆட்சியா்

6th Jul 2022 01:52 AM

ADVERTISEMENT

சுதந்திர தின அமுதப்பெருவிழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக முகப்பில், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா முன்னிலையில், அனைத்து அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கதா் அல்லது கைத்தறியால் ஆன பாரம்பரிய உடை அணிந்த தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை செவ்வாய்க்கிழமை இணைந்து பாடினா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், மகளிா் திட்டஇயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணான்டோ, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணைஆட்சியா் தே.திருப்பதி, மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பா.ஜான்ஜெகத்பிரைட், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) எம்.ஆா்.வாணி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் ஷீலாஜான், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் நாகராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும்சிறுபான்மையினா் நல அலுவலா் ஹரிதாஸ், மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறை அலுவலா் சரோஜினி, அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் சேகா், உசூா் மேலாளா்கள் கண்ணன்(பொது), சுப்பிரமணியன் (குற்றவியல்)உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT