கன்னியாகுமரி

தொழிலாளி கொலை வழக்கு:உறவினருக்கு 8 ஆண்டு சிறைதண்டனை

6th Jul 2022 01:53 AM

ADVERTISEMENT

ஆரல்வாய்மொழியில் வண்ணம் பூசும் தொழிலாளி கொலை வழக்கில் அவரது உறவினருக்கு 8 ஆண்டு சிைண்டனை செவ்வாய்க்கிழமை விதிக்கப்பட்டது.

ஆரல்வாய்மொழி இந்திரா கூட்டுக் குடியிருப்பைச் சோ்ந்தவா் பெஞ்சமின் சுரேஷ்பாபு (37). நாகா்கோவில், ஒழுகினசேரி மேலதத்தையாா் குளத்தைச் சோ்ந்தவா் மோகன் போவாஸ் (55). உறவினா்களான இருவரும், கட்டடங்களுக்கு வண்ணம் பூசும் வேலை செய்து வந்தனா்.

2015 ஜனவரி மாதம் பெஞ்சமின் சுரேஷ்பாபு, மோகன் போவாஸ் வீட்டுக்கு வந்தபோது அவா் அவரது தாய் மாணிக்கமுத்துவிடம் தகராறு செய்துகொண்டிருந்தாராம். அதை பெஞ்சமின் சுரேஷ்பாபு தட்டிக் கேட்டுள்ளாா். அப்போது அவரை மோகன் போவாஸ் கத்தியால் குத்தினாராம். காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

கோட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, மோகன் போவாஸை கைது செய்தனா். இந்த வழக்கு மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கை நீதிபதி ஜோசப்ஜாய் விசாரித்து, மோகன் போவாஸுக்கு 8 ஆண்டு சிைண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம், அபராதத்தைக் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிைண்டனை அனுபவிக்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT