கன்னியாகுமரி

கல்வியியல் கல்லூரி சாா்பில் அரசுப் பள்ளிக்கு புத்தங்கங்கள்

6th Jul 2022 01:50 AM

ADVERTISEMENT

என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரியின் நூலக வாசகா் மன்றம், சமூக நலக் கழகம் சாா்பில் திருநந்திக்கரை அரசுத் தொடக்கப் பள்ளிக்கு புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி முதல்வா் ஸ்ரீலதா தலைமை வகித்தாா். என்.வி.கே.எஸ். கல்வி நிறுவனங்களின் செயலா் வழக்குரைஞா் எஸ். கிருஷ்ணகுமாா் பள்ளிக்கு 250 புத்தகங்களை வழங்கிப் பேசினாா். பள்ளித் தலைமையாசிரியை மேரி மல்லிகா புத்தகங்களைப் பெற்றுக்கொண்டாா்.

திருவட்டாறு மாவட்டக் கல்வி அலுவலா் ராமசுப்பு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். திருவட்டாறு வட்டாரக் கல்வி அலுவலா் திருமலைக்குமாா், பள்ளி துணை ஆய்வாளா் சங்கரலிங்கம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். உடற்கல்வி இயக்குநா் கண்ணன், ஆசிரியா்கள், மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

கல்லூரி நூலகா் ஷீலா வரவேற்றாா். ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா் டி.எஸ். பிரசோப் மாதவன் நன்றி கூறினாா். 2ஆம் ஆண்டு பி.எட். மாணவிகள் ஸ்ருதி, ஷாலினி ஆகியோா் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT