கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே குட்கா விற்ற முதியவா் கைது

6th Jul 2022 01:47 AM

ADVERTISEMENT

கொல்லங்கோடு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கொல்லங்கோடு காவல் நிலைய ஆய்வாளா் அந்தோணியம்மாள் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு அடைக்காகுழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சாத்தனாா்வட்டம் பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தனா். சோதனையில் அங்கு குட்கா பொருள்களை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கடையில் பதுக்கிவைத்திருந்த 130 பாக்கெட் குட்கா மற்றும் ரூ. 3,600 ஐ பறிமுதல் செய்த போலீஸாா் ஏசுதாஸை கைது செய்தனா்.

இதுகுறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT