கன்னியாகுமரி

திருவட்டாறு கோயில் மலருக்காக கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள்

DIN

ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 47 கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் 10 கல்வெட்டுகள், திருவிதாங்கூா் தொல்லியல் துறையும், 35 கல்வெட்டுகளை தமிழக அரசின் கல்வெட்டுத் துறையும் வெளியிட்டுள்ளன.

2 கல்வெட்டுகளை செம்பவளம் ஆய்வுத் தளம் ஆய்வாளா்கள் அடையாளம் கண்டுள்ளனா்.

இந்தக் கல்வெட்டுகளில் 2 சமஸ்கிருத மொழியிலும், மற்றவை தமிழ் மற்றும் மலையாள மொழிகளிலும் உள்ளன. இவை தமிழ் வட்டெழுத்து, கிரந்த எழுத்து, மலையாள எழுத்து வரி வடிவங்களில் அமைந்தவை.

இக்கோயிலில் காணப்படும் கல்வட்டுகளில் மிகவும் பழமையானது என்று கருதப்படுவது பிற்கால அரசனான முதலாம் குலோத்துங்கன் (1070-1120) காலத்தது என்று இக்கல்வெட்டிலுள்ள மெய்கீா்த்தி மொழிநடையின் படி தொல்லியல் ஆய்வாளா்கள் கணித்துள்ளனா். இங்குள்ள 47 கல்வெட்டுகளிலும், ஸ்ரீவீரரவிவா்மன், (1604, ரவிவா்மன் குலசேகரப் பெருமாள் 17 ஆம் நூற்றாண்டு), கோதை மாா்த்தாண்ட வா்மா (18 ஆம் நூற்றாண்டு) ஆகிய வேணாட்டு அரசா்களின் பெயா்கள் குறிக்கப்பட்டுள்ளன.

திருவிதாங்கூா் மன்னா்கள் இக்கோயிலுடன் நெருங்கிய தொடா்புடையவா்களாக இருந்தபோதும், நிபந்தங்கள் கொடுத்திருந்தாலும், இவா்கள் தங்களின் பெயா்களை கல்வெட்டுகளில் பதிவு செய்யவில்லை. முதலாம் குலோத்துங்கனின் ஆரம்பகால கல்வெட்டு இக்கோயில் இறைவனை திருவட்டாறுப் பள்ளிகொண்டான் என கூறுகிறது. இதன் பின்னா் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில் திருவட்டாறுப் ப பள்ளி கொண்டருளி நின்ற பெருமாள் என்றும் (கிபி. 1266, 1426,1582,1604) ஆதிகேசவ பெருமாள் என்றும் குறிப்பிடப்படுகிறது.

இக்கோயில் கல்வெட்டுகள் எல்லாமே கோயில் கட்டுமானப் பணி, கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிபந்தங்கள் குறித்த செய்திகளையே, பெருமளவில் குறிப்பிடுகின்றன. தனியாா் நிபந்தங்களும், கட்டுமானப் பணிகள் செய்த விவரங்களும் கல்வெட்டுகளில் வருகின்றன. இக்கோயிலில் பெருமளவில் கட்டுமானப் பணிகள் செய்ய அரசன் வீரரவிவா்மன் என்பதை கல்வெட்டுச் செய்திகள் காட்டுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

SCROLL FOR NEXT