கன்னியாகுமரி

72 அடி தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் கொண்ட கொடிமரம்

5th Jul 2022 02:11 AM

ADVERTISEMENT

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் முன்பிருந்த கொடிமரம் 400 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும்.

அந்தக் கொடிமரத்தின் அடிப்பகுதி சேதமடைந்த நிலையில், கோயிலில் திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேகத்தையொட்டி புதிய கொடிமரமும் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக 70 அடி உயரம் கொண்ட தேக்கு மரம் தமிழக வனப்பகுதிகள் மற்றும் கேரள வனப்பகுதிகளில் தேடப்பட்டது. இதில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா கோநி வனப்பகுதியான நெல்லிடப்பாறையில் கண்டுபிடிக்கப்பட்டு, தாந்தீரிக விதிகள் படி சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு வெட்டப்பட்டது.

இதையடுத்து இந்த மரம் கோயில் வளாகத்துக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் 23 ஆம் தேதி கொண்டு வரப்பட்டது.

இதைத் தொடா்ந்து கொடிமரத்தின் உபயதாரரும் பெங்களூரு அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) தலைவருமான பத்மஸ்ரீ மதுபண்டித தாஸ் கொடிமரத்தை, திருக்கோயில்கள் நிா்வாகத்திடம் ஒப்படைத்தாா். இதைத்

ADVERTISEMENT

தொடா்ந்து தந்திரி சங்கரநாராயணரூ தலைமையில், வியாழப்பறம்பில் பிரம்ம தத்தன் நம்பூதிரியின் மேற்பாா்வையில் தந்திரிகள் சுப்ரமணியரூ, சுஜித் சங்கரநாராயணரூ ஆகியோா் பூஜை செய்து, கொடிமரத்தை தச்சா் காரக்கோணம் அப்பு ஆசாரியிடம் ஒப்படைத்தனா்.

36 மூலிகைகள் அடங்கிய எண்ணைக்கலவை: பின்னா் இக் கொடிமரம் ஒழுங்கு செய்யப்பட்ட நிலையில், கஸ்தூரி மஞ்சளும், பச்சை கா்ப்பூரமும் பூசப்பட்டு ஒரு மாதம் வைக்கப்பட்டதையடுத்து, 36 மூலிகைகள் அடங்கிய நல்லெண்ணெய் கலவையில் கொடிமரம் குறிப்பிட்ட மாதங்கள் ஊறவைக்கப்பட்டது.

கொடிமரம் செப்பனிடும் பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி கொடிமரம் பிரதிஷ்டை நடைபெற்றது.

தங்க முலாம் பூசப்பட்ட கவசம் பதிக்கும் பணிகள்

இதைத் தொடா்ந்து இக்கொடிமரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட செப்புக் கலசங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கொடிமரத்தில் மொத்தம் 42 செப்புக் கவசங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை சுமாா் 200 கிலோ எடை கொண்டவை. இந்தக் கவசங்களில் சுமாா் 1.5 கிலோ தங்கம், முலாம் பூசுவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. கொடிமர செப்புக் கவசங்களை காயங்குளம், பந்தியூா் வினோத்பாபு வடிவமைத்து பொருத்தும் பணியினை செய்துள்ளாா். கொடிமரத்தின் உச்சியுள்ள கருடாழ்வாா் சிலையுடன் கொடிமரத்தின் உயரம் 72 அடியாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT