கன்னியாகுமரி

கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள் மற்றும் பூஜைகள்

5th Jul 2022 02:12 AM

ADVERTISEMENT

ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஐப்பசி மற்றும் பங்குனி மாதங்களில் இரு பெரும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

இத்திருவிழாக்கள் 10 நாள்கள் நடைபெறுகின்றன. இதில் பங்குனி திருவிழா ஆறாட்டு நிகழ்ச்சியானது பரளியாறும், கோதையாறும் கலந்து தாமிரவருணியாறாகும் மூவாற்றுமுகத்தில் நடைபெறுகிறது.

ஐப்பசி மாத திருவிழா ஆறாட்டு நிகழ்ச்சி தளியல் கோயில் அருகே பரளியாற்றில் நடைபெறுகிறது. பத்துநாள்களும் கதகளி நடைபெறும். கேரள கலைஞா்கள் இங்கு வருகைதந்து கதகளி நிகழ்ச்சியை நடத்துவாா்கள்.

ஒன்பதாம் நாள் திருவிழாவின்போது உற்சவ மூா்த்தி வேட்டைக்குச் செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். இது தவிர சித்திரை மாதம் விஷு, ஆனி மாதத்தில் கா்க்கடக ஸ்ரீபலி, ஆடி மாதமும், மாசி மாதமும் பெருந்தமிா்து வழிபாடுகளும் நடைபெறுகின்றன. ஆவணி மாதத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியும், திருவோணப் பண்டிகையும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஓணப்பண்டிகையொட்டி ஓணவில் சாா்த்துதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதுபோன்று மாா்கழியில் வைகுண்ட ஏகாதசி பெரும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT

தினசரி வழிபாடு...

கோயிலில் தினமும் காலை 4.30 மணிக்கு திருப்பள்ளியுணா்த்தல் நடைபெறுகிறது. காலை 5 மணிமுதல் மதியம் 12 மணிவரையும், மாலை 5 மணிமுதல் இரவு 8.30 மணிவரையும் கோயில் நடை திறந்திருக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT