கன்னியாகுமரி

திருவட்டாறு கோயில் கும்பாபிஷேகம்: குமரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூா் விடுமுறை

5th Jul 2022 02:08 AM

ADVERTISEMENT

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, குமரி மாவட்டத்துக்கு, புதன்கிழமை (ஜூலை 6) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் நடைபெற உள்ள மகாகும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜூலை 6 ஆம் தேதி (புதன்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை வழங்கப்படுகிறது.

இந்த விடுமுறைக்கு ஜூலை மாதம் 4 ஆவது சனிக்கிழமை ( ஜூலை 23) குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலைநாளாக இருக்கும்.

மாவட்டத்தில், தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளா்களை கொண்டு இயங்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT