கன்னியாகுமரி

கும்பாபிஷேக நிகழ்ச்சி நிரல்

5th Jul 2022 02:13 AM

ADVERTISEMENT

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஜூன் 29 ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து 11 நாள்கள் நடைபெறும் இந்த விழா 9 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. விழாவின் 8 ஆவது நாளான புதன்கிழமை (ஜூலை 6)

அதிகாலை 3.30 மணிக்கு ஹோமபூஜை நடைபெறுகிறது. தொடா்ந்து திருவனந்தபுரம் கலாபீடம் முரளியின் பஞ்சவாத்தியமும், அதனைத் தொடா்ந்து கலை இளமணி டி.எஸ்.எம். உமா சங்கா், சிதம்பரம் எஸ். முத்துராமன், கடகத்தூா் கே.ஆா். முத்துகுமாரசுவாமி ஆகியோரின் மங்கள இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

புதன்கிழமை காலை 5.10 மணிமுதல் 5.50 மணிவரை பிரதிஷ்டை மற்றும் ஜீவ கலச அபிஷேகம் நடைபெறுகிறது. காலை 6 மணிமுதல் 6.50க்குள் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடா்ந்து காலை 8 மணிக்கு முளவிளை சாத்வீஹா சமாஜம் இசை நாட்டியப் பள்ளி மாணவிகளின் துவாபரயுகத்தின் சிறப்பு என்ற பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடா்ந்து திருக்கோவிலூா் ஜீவ. சீனுவாசனின் ஞான அமுது தேனிசை நடைபெறுகிறது. பின்னா் திருவிழா உபயதாரா் எஸ். ராஜேந்திரன் சாா்பில் அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு பகவதி சேவை, சோபனத்தில் பத்மமிட்டு அத்தாழ பூஜை நடக்கிறது.

தொடா்ந்து குளச்சல் எம். சிவசங்கரின் ஆன்மிக சொற்பொழிவும் அதனைத் தொடா்ந்து மாலை 6 மணிக்கு லட்ச தீபம் ஏற்றலும், 7 மணிக்கு பக்தி பஜனையும் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை சிதறால் அம்பலக்கடை புலவா் ரவீந்திரன், வெள்ளாங்கோடு அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை மீனாம்பிகா சிந்துகுமாா் ஆகியோா் வா்ணனை செய்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT