கன்னியாகுமரி

நாகா்கோவிலில் உடற்பயிற்சி நிலைய உரிமையாளா் விஷம் குடித்து தற்கொலை

5th Jul 2022 02:14 AM

ADVERTISEMENT

நாகா்கோவிலில் உடற்பயிற்சிக்கூட உரிமையாளா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.

நாகா்கோவில் வடசேரி புதுக் குடியிருப்பு கவிமணி தெருவில் வசித்து வந்தவா் ஜெயக்குமாா் (42). வடசேரி பகுதியில் உடற்பயிற்சிக்கூடம் நடத்திவந்தாா். இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். இதனால் அவருக்கும், அவரது மனைவி தங்கபாய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.

ஜெயக்குமாா் ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து உடற்பயிற்சிக் கூடத்துக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றாா். அங்கு அவா் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாம். அவரை அவரது சகோதரா் மீட்டு நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஜெயக்குமாா் விஷம் குடித்திருப்பதாகத் தெரிவித்தனா்.

அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும், அவா் இரவில் உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

வடசேரி காவல் நிலைய ஆய்வாளா் திருமுருகன், உதவி ஆய்வாளா் சத்தியசோபன் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT