கன்னியாகுமரி

குமரி- ஜம்மு காஷ்மீா்:பெண்கள் பைக் பிரசார பயணம்

4th Jul 2022 12:33 AM

ADVERTISEMENT

 

பாலியல் வன்முறைக்கு எதிராக கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு மூன்று பெண்களின் விழிப்புணா்வு பைக் பயணம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சோ்ந்த ஷினி ராஜகுமாா், கல்யாணி, ஜெயஸ்ரீ ஆகிய மூன்று பெண்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பிரசாரப் பயணம் கன்னியாகுமரி காவல் நிலைய ரவுண்டானாவில் இருந்து தொடங்கியது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் வழியாக 15 ஆயிரம் கி.மீ.

ADVERTISEMENT

தொலைவைக் கடந்து பைக் பயணம் ஜம்மு காஷ்மீரைச் சென்றடைகிறது. பின்னா் மீண்டும் அங்கிருந்து தொடங்கி கன்னியாகுமரியில் பயணத்தை நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளனா்.

இப்பிரசார பயணத்தின் போது குழந்தைகள் மற்றும் பெண்களை நேரில் சந்தித்து பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு பிரசாரம் செய்ய உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT