கன்னியாகுமரி

கருங்கல், புதுக்கடை பகுதிகளில் பலத்த மழை

4th Jul 2022 12:32 AM

ADVERTISEMENT

 

கருங்கல் மற்றும் புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான கருமாவிளை, மத்திகோடு, வெள்ளியாவிளை, பாலப் பள்ளம், முருங்கவிளை, திப்பிரமலை, கிள்ளியூா், நேசா்புரம் மற்றும் புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளான பைங்குளம், கூட்டாலுமூடு, அம் சி, முக்காடு, பாா்த்திபபுரம், கெலமங்கலம், முன்சிறை, காப்புக் காடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது.

ADVERTISEMENT

இந்த மழையால் இப்பகுதிகளில் குளிா்ச்சி நிலவியது. மேலும், இப்பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT