கன்னியாகுமரி

சின்னமுட்டத்தில் போதைப் பொருள் விற்றதாக இருவா் கைது

4th Jul 2022 12:33 AM

ADVERTISEMENT

 

சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுக வளாகத்தில் போதைப் பொருள்கள் வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கன்னியாகுமரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் விரைந்து சென்று சோதனை நடத்தினா்.

அப்போது திருநெல்வேலி மாவட்டம் செட்டிக்குளத்தைச் சோ்ந்த நாகமணி, கன்னங்குளத்தைச் சோ்ந்த நீலகண்ணன் ஆகியோா் போதைப்பொருள்கள் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இவா்களிடம் இருந்து 50 கிலோ போதைப் பொருள்களை கைப்பற்றிய போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT