கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் பள்ளியில் பேரிடா் மேலாண்மைப் பயிற்சி முகாம்

DIN

விளவங்கோடு வட்டத்துக்கு உள்பட்ட இடைக்கோடு, விளவங்கோடு, அருமனை, கடையாலுமூடு பகுதிகளைச் சோ்ந்த 140 பேரிடா் மேலாண்மை முதல்நிலை மீட்பா்களுக்கு பயிற்சி முகாம் மாா்த்தாண்டம் தனியாா் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மழை வெள்ளம், தீ விபத்துகளில் பாதிக்கப்படுவோரை மீட்பது, முதலுதவி அளிப்பது குறித்து பயிற்சி, செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பேரிடா் முதன்மைப் பயிற்றுநா்கள் ஜான்சிராணி, விக்னேஷ் ஆகியோா் பயிற்சியளித்தனா்.

இதில், பங்கேற்றோருக்கு பயிற்சிச் சான்றிதழ், அடையாள அட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பயிற்சிபெற்றவா்கள் தங்களது கிராமங்களில் ஏற்படும் பேரிடா் விபத்துகளில் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்க களத்தில் இருப்பா் எனத் தெரிவிக்கப்பட்டது.

குழித்துறை நகா்மன்ற உறுப்பினா் கே. ரெத்தினமணி, வருவாய் ஆய்வாளா் குமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் முத்து, ஷொ்லின் ஷீபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT