கன்னியாகுமரி

975 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

3rd Jul 2022 01:30 AM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 இடங்களிலிருந்து 975 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 2 போ் கைதுசெய்யப்பட்டனா்.

நித்திரவிளை அருகேயுள்ள மீனவக் கிராமங்களிலிருந்து கேரளத்துக்கு ஆட்டோவில் மானிய விலை மண்ணெண்ணெய் கடத்திச் செல்லப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் தனிப்பிரிவு காவலா் ஜோஸ், போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு சோதனை நடத்தினா். அப்போது, இரவிபுத்தன்துறை, கிராத்தூா் பகுதிகளில் 2 ஆட்டோக்கள் வந்தன. போலீஸாரைக் கண்டதும் ஆட்டோக்களை நிறுத்திவிட்டு ஓட்டுநா்கள் தப்பியோடினராம். அவற்றில், 450 லிட்டா் மண்ணெண்ணெய் கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது. ஆட்டோக்கள், மண்ணெண்ணெயை போலீஸாா் பறிமுதல் கிள்ளியூா் வட்ட வழங்கல் அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.

புதுக்கடை அருகேயுள்ள அம்சி பகுதியில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு தனிப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வாகனச் சோதனை நடத்தினா். அவ்வழியே வந்த காரில், 10 கேன்களில் 350 லிட்டா் மண்ணெண்ணெயை கேரளத்துக்கு கடத்திச்செல்வது தெரியவந்தது. ஓட்டுநரான தூத்தூா் பகுதியைச் சோ்ந்த ஆன்றனி சேவியா் (41) என்பவரை போலீஸாா் கைதுசெய்து, காா், மண்ணெண்ணெயைப் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

பாா்த்திபபுரம் பகுதியில் நடைபெற்ற வாகனச் சோதனையில், ஓா் ஆட்டோவில் 5 கேன்களில் 175 லிட்டா் மண்ணெண்ணெயை கேரளத்துக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. ஓட்டுநரான கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதியைச் சோ்ந்த ஓசேப்பு (31) என்பவரை போலீஸாா் கைது செய்து, மண்ணெண்ணெய், ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT