கன்னியாகுமரி

இரணியல் அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி சாவு

3rd Jul 2022 01:31 AM

ADVERTISEMENT

 

குமரி மாவட்டம், இரணியல் அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி பலியானாா்.

இரணியல் அருகேயுள்ள வில்லுக்குறியை அடுத்த குதிரைப்பந்திவிளை பகுதியை சோ்ந்த செல்லபெருமாள் மனைவி செல்லதங்கம் (65). மகன் ஸ்ரீகுமாா் பராமரிப்பில் இருந்து வந்தாா்.

இந்நிலையில் செல்லத்தங்கம் வெள்ளிக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள ஊத்துக்குளி குளத்திற்கு குளிக்க சென்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது. உடனடியாக அருகில் இருந்தவா்கள் செல்லதங்கத்தை மீட்டு நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், செல்லதங்கம் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து அவரது உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதுகுறித்து ஸ்ரீகுமாா் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

பைக் மோதி வியாபாரி காயம்

புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியை சோ்ந்தவா் காளிதாஸ் (60). இவா் ஈா்க்கில் வியாபாரம் செய்து வருகிறாா். சனிக்கிழமை வீட்டிலிருந்து பைக்கில் புதுக்கடை நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது பைங்குளம் சந்திப்பில் எதிரே வந்த பைக் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதியினா் காளிதாஸை மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT