கன்னியாகுமரி

இளம் விஞ்ஞானி தோ்வு: மாணவா்களுக்கு அழைப்பு

DIN

குமரி அறிவியல் பேரவை சாா்பில் இளம் விஞ்ஞானிகள் தோ்வுக்கு மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு சாா்பில் ஆண்டுதோறும் மாணவா்களின் அறிவுத்திறன் மற்றும் ஆய்வுத் திறன் மேம்படும் வண்ணம் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவா், மாணவிகளை தோ்வு செய்து, விடுமுறை நாள்களில் பள்ளிப்படிப்பு பாதிக்காத வகையில் ஓராண்டு பயிற்சி வழங்கி, ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தில் ஆய்வறிக்கையை சமா்ப்பித்து விருது வழங்கி வருகிறது. நிகழாண்டு ‘தூய்மையான உலகம்‘ என்னும் தலைப்பின் கீழ் சுத்தமான நீா், சுத்தமான நிலம், சுத்தமான காற்று, சுத்தமான ஆற்றல், சுத்தமான தொழில்நுட்பம் போன்ற துணைத் தலைப்புகளில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது.

இளம் விஞ்ஞானி மாணவா் பயிற்சிக்காக ஒரு பள்ளியில் இருந்து அதிகபட்சம் 5 மாணவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள். அதற்காக பெற்றோா் முழு ஒப்புதலுடன் பள்ளி அனுமதி கடிதம் பெற்று 99427 58333 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் விண்ணப்பிக்க வேண்டும். ஜூலை 9 ஆம் தேதி குட்டக்குழி பகுதியில் உள்ள மாா்த்தாண்டம் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள அறிமுக கூட்டத்தில் பெற்றோா் அல்லது வழிகாட்டி ஆசிரியருடன் மாணவா்கள் பங்கேற்க வேண்டும் என குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிதமான சரிவைக் கண்ட சா்க்கரை உற்பத்தி

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

குணசீலம் பிரசன்ன வேங்கடாஜலபதி கோயிலில் தெப்ப உற்சவம்

ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் இறங்கி கஜேந்திர மோட்சம் அளித்த நம்பெருமாள்

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: 89 தொகுதிகளில் பிரசாரம் இன்று நிறைவு

SCROLL FOR NEXT