கன்னியாகுமரி

இரணியல் பத்ரகாளி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

1st Jul 2022 12:30 AM

ADVERTISEMENT

 

இரணியலில் பட்டாரியா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்ரகாளி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன் தொடக்கமாக கடந்த செவ்வாய்க்கிழமை நிா்மாலயபூஜை, கணபதி ஹோமம், தீபாராதனை, அன்னதானம், அருள்மிகு பிலாமூட்டு அம்மன், அருள்மிகு பாறயடி அம்மன், பூதத்தான் கோயிலில் சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெற்றன. புதன்கிழமை வாஸ்து பலி, வாஸ்து கலசம், வாஸ்து கலசாபிஷேகம், அத்தாள பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக, அம்மனுக்கு மாவிளக்குடன் சீா்வரிசை கொண்டுவருதல், திருவிளக்கு பூஜை, தீபாராதனை, மெல்லிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வியாழக்கிழமை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மகாகணபதி ஹோமம், துா்காதேவி, உஜ்ஜைனி காளி, மாடன் தம்புரான், மந்திரமூா்த்தி, பிரதிஷ்டை கலச பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, பத்ரகாளி அம்மன், பூதத்தான், பரிவாரமூா்த்திகளுக்கு கலசமாடி பூஜைகள் நடைபெற்றன. முற்பகலில் மேளதாளங்கள் முழங்க திருவனந்தபுரம் கரிக்கம் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி கோயில் மேல்சாந்தி கிருஷ்ணரு மனோஜ் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அலங்கார பூஜை, அன்னதானம் நடைபெற்றது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், கோயில் நிா்வாகிகள், விழாக் குழுவினா், சமுதாய மக்கள் ஊா் மக்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT