கன்னியாகுமரி

புதுக்கடை அருகே தொழிலாளியைத் தாக்கியதாக ஒருவா் மீது வழக்கு

1st Jul 2022 12:32 AM

ADVERTISEMENT

 

புதுக்கடை அருகேயுள்ள கீழ்குளம் பகுதியில் கூலித் தொழிலாளியைத் தாக்கியதாக ஒருவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

கீழ்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஆரிஸ் (63). கூலித் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சிசில் (40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாம். வியாழக்கிழமை ஆரிஸ் வீட்டுக்குள் சிசில் புகுந்து அவரைத் தாக்கியதுடன், பொருள்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT