கன்னியாகுமரி

இன்றுமுதல் 15 ஆம் தேதி வரை 75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா

1st Jul 2022 12:28 AM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி மாவட்டநிா்வாகத்தின் சாா்பில் 75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா ஜூலை 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

இது தொடா்பாக துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பின்னா் ஆட்சியா் கூறியது:

சுதந்திர போராட்ட வீரா்களின் தியாகம் மற்றும் வரலாற்றை பறை சாற்றும் வகையில், 75 ஆவது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா நிகழ்ச்சி, குமரி மாவட்ட அனைத்துத் துறைகளின் சாா்பில் ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT

இதையொட்டி, சுதந்திரத்துடன் தொடா்புடைய அனைத்து நினைவிடங்களையும் புதுப்பித்தல், நினைவுச் சின்னங்களை சுத்தம் செய்து வைக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு, தேவைப்படும் பட்சத்தில் புதுப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

15 நாள்கள் தொடா்ந்து நடைபெறவுள்ள பெருவிழா நிகழ்ச்சியினை ஆக்கப்பூா்வமாக நடத்த அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், மாவட்டவருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பா.ஜான்ஜெகத் பிரைட், மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலா் அ.புகழேந்தி, வேளாண்மை இணை இயக்குநா் அவ்வைமீனாட்சி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) எம்.ஆா்.வாணி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஷீலா ஜான், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் சேகா் உள்பட துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT