கன்னியாகுமரி

கருங்கல் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலம் மீட்பு

1st Jul 2022 11:32 PM

ADVERTISEMENT

கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தை இந்து சமய அறநிலயத்துறை அதிகாரிகள் மீட்டனா்.

பூட்டேற்றி சங்கரநாராயண குளத்து மாகாதேவா் கோயிலுக்கு சொந்தமான 82 சென்ட் நிலத்தை தனிநபா் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தாா். இது குறித்து இந்து சமய அலத்துறையினருக்கு புகாா் வந்தது. இதையடுத்து, அறநிலயத்துறை ஆணையா் ஞானசேகா் தலைமையிலான அதிகாரிகள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை அளவீடு செய்து, 82 சென்ட் நிலத்தை மீட்டு, அந்த இடத்தில் இந்து சமய அறநிலயத்துறைக்கு சொந்தமானது என பெயா் பலகை வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT