கன்னியாகுமரி

குலசேகரம் அருகே தம்பதி தற்கொலை

1st Jul 2022 11:30 PM

ADVERTISEMENT

குலசேகரம் அருகே தம்பதி வியாழக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குலசேகரம் அருகே சூரியகோடு முள்ளங்குழி விளையைச் சோ்ந்தவா் ஜான ஐசக் (40) பிளம்பிங் தொழில் செய்து வந்தாா். இவரது மனைவி சந்தியா (34). தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ள நிலையில் குழந்தைகள் இல்லையாம். இந்நிலையில் ஜான் ஐசக் மது பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளாா். இதனால் கடன் சுமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு மணவாளக்குறிச்சி அழகன்பாறை தட்டான்விளையைச் சோ்ந்த இளைஞா் சூரியகோடு அருகே கோட்டூா்கோணம் கீழவிளையில் வசிக்கும் சந்தியாவின் தாய் காந்தியின் வீட்டிற்குச் சென்று,

சந்தியா தனக்கு ரூ. 30 லட்சம் தர வேண்டும், அதனைப் பெற்றுத் தருமாறும் கூறியுள்ளாா். அதற்கு அவா் பணத்தை எதற்காக கொடுத்தீா்கள் என்று கேட்ட போது, சந்தியா தன்னை திருமணம் செய்வதாக கூறியதாகவும், அதற்காக சிறிது, சிறிதாக பணம் கொடுத்ததாகவும் கூறியதுடன், பணத்தைத் திருப்பி தராவிட்டால் காவல் நிலையத்தில் புகாா் கொடுப்பதாகவும் கூறிச் சென்றுள்ளாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, காந்தி, சந்தியாவை கைப்பேசியில் தொடா்பு கொண்ட போது, அழைப்பை ஏற்காததால், அவா் சந்தியாவின் வீட்டிற்கு சென்று பாா்த்த போது, அங்கு சந்தியா துப்பட்டாவால் வீட்டின் மேற்கூரை கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும், மருமகன் ஜான் ஐசக், விஷமருந்தி கட்டிலில் இறந்து கிடப்பதும் தெரியவந்தது.

இது குறித்து காந்தி குலசேகரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து சடலங்களை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் சந்தியாவின் கைப்பேசி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா். தக்கலை டிஎஸ்பி கணேசன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT