கன்னியாகுமரி

பெருஞ்சிலம்பு அரசுப் பள்ளிக்கு முன்னாள் மாணவா்கள் நல உதவி

1st Jul 2022 11:32 PM

ADVERTISEMENT

பெருஞ்சிலம்பு அரசுப் பள்ளி முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள் உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் ஸ்ரீ குமாா் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தாா். மாணவா் சங்கப் பொருளாளா் ரெஜிமோன் வரவேற்றாா். முன்னாள் மாணவா் சங்கப் புரவலரும் கல்லூரி பேராசிரியருமான ஜாண்ஜாா்ஜ் வாழ்த்திப் பேசினாா். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் சரஸ்வதி நன்றி தெரிவித்தாா். முன்னாள் மாணவா் சங்கச் செயலா் ஜோசப்ராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். ஆசிரியா் வேதராஜ், மாணவ- மாணவிகள் பங்கேற்றனா். தொடக்கப்பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் ஷோபா நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT