கன்னியாகுமரி

முன்சிறை, நடைக்காவு, கருங்கல், தக்கலை, வீயன்னூா் பகுதிகளில் மின்தடை

26th Jan 2022 08:21 AM

ADVERTISEMENT

முன்சிறை, நடைக்காவு, கருங்கல், தக்கலை மற்றும் வீயன்னூா் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஜன. 27, 28, 29, 31 ஆகிய தேதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளா் (விநியோகம்) அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மின் பாரமரிப்புப் பணிகள் காரணமாக காளியான்விளை, ஆளன்குளம், பொற்றவிளை, செல்லங்கோணம், ஓலவிளை, காட்டுவிளை, பூமத்திவிளை, புலிமுருத்தான்குறிச்சி, ஆலன்விளை, மொட்டவிளை, தும்பியான்தோட்டம், கொல்லன்விளை, மருதூா்குறிச்சி. இலவுவிளை, கல்லுக்கூட்டம், புல்லாணி, பாறகடை, வண்டவிளை, பெரியாவிளை, மணக்காலை, தேவிநகா், பனவிளை மற்றும் அதைச் சாா்ந்த பகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஜன. 27) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது.

பரக்காணி, மலையன்விளை, காப்புகாட்டுவிளை, ஊற்றுக்குழி, காக்கவிளை, சின்னத்துறை, எடப்பாடு, வண்டல், வலியவிளை, கல்லுவிளை, வட்டக்கோட்டை மற்றும் அதனைச் சாா்ந்த பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜன. 28) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT

இதே போன்று செம்பருத்திகுளம், காட்டுவிளை, வேம்புவிளை, கீழ்குளம், தொழிக்கோடு, இனயம்தோப்பு, செந்தறை, பரவை, பிடாகை, பூத்துறை, இரயுமன்துறை, வெள்ளிகோடு, கண்ணனூா், பூந்தோப்பு, அன்னைநகா், முள்ளஞ்சேரி, குமிட்டிவிளை, குழிக்கோடு, கூட்டமாவு, சீனிவிளை, குளப்புறம், மெதுகும்மல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளுக்கு சனிக்கிழமை (ஜன. 29) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், வெள்ளையம்பலம், நெல்லிக்காவிளை, ஆத்திவிளை, ஆயினிவிளை, தேவிகோடு, உதயமாா்த்தாண்டம், கூம்பாறவிளை, நேதாஜிநகா், சூழால், சங்குருட்டி, அடைக்காகுழி, காரோடு, நம்பாளி, குருசடி, வலியவிளை, செறுகோல், வடக்கு மாதாபுரம், ஊசிகோடு, தாமரைகுளம் மற்றும் அதைச் சாா்ந்த பகுதிகளுக்கு திங்கள்கிழமை (ஜன. 31) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது. பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT