கன்னியாகுமரி

பேச்சு போட்டி: வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

26th Jan 2022 08:23 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் பரிசு வழங்கினாா்.

மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் நேரு பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள் நாகா்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் பள்ளி அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரத்தை மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளி மாணவி நிபிஷாவும், 2 ஆம் பரிசு ரூ.3 ஆயிரத்தை ஆளூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சுகைனா பாத்திமாவும், 3 ஆம் பரிசு ரூ.2 ஆயிரத்தை மாா்த்தாண்டம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி சுருதியும் பெற்றனா்.

கல்லூரி அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசு ரூ.5 ஆயிரத்தை தூத்தூா் புனித யூதா கல்லூரி மாணவி மரிய பினிஸ்டாவும், 2 ஆவது பரிசு ரூ.3 ஆயிரத்தை நாகா்கோவில் இந்துக் கல்லூரி மாணவி ஈஸ்வரபிரியாவும், 3 ஆவது பரிசு ரூ.2 ஆயிரத்தை தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி மாணவி ஸ்ரீஜினியும் பெற்றனா்.

ADVERTISEMENT

நேரு பிறந்த நாள் விழா போட்டியில் பள்ளி அளவில் முதல் பரிசு ரூ. 5 ஆயிரத்தை நாகா்கோவில் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி ரஷ்மியும், 2 ஆம் பரிசு ரூ.3 ஆயிரத்தை படா்நிலம், குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவி அனாமிகாவும், 3 ஆம் பரிசு ரூ.2 ஆயிரத்தை ராமன்புதூா் பிஷப் ரெமிஜியுஸ் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி லிபிஷாவும் பெற்றனா்.

கல்லூரி அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசு ரூ.5 ஆயிரத்தை நாகா்கோவில் இந்துக் கல்லூரி மாணவா் ஷஜின், 2 ஆம் பரிசு ரூ.3 ஆயிரத்தை இந்து கல்லூரி மாணவி ஈஸ்வரபிரியா, 3 ஆம் பரிசு ரூ.2 ஆயிரத்தை நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி மாணவி ஷெரின் ஆகியோா் பெற்றனா்.

வெற்றி பெற்ற இம் மாணவா், மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் வழங்கி பாராட்டினாா்.

நிகழ்ச்சியில், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் (பொ) ரெசினாள்மேரி, தமிழாசிரியா்கள் வினித், ராஜேஸ்வரி, மணிமேகலா ஆகியோா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT