கன்னியாகுமரி

குமரியில் கடும் வெயில்: திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீா்

26th Jan 2022 08:24 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டத்தில் கடும் வெயில் நிலவும் நிலையில் திற்பரப்பு அருவியில் மிதமாக தண்ணீா் கொட்டுகிறது.

கரோனா பரவல் காரணமாக சுற்றுலாத் தலங்கள் குமரி மாவட்டத்தில் பெரும்பாலும் வெறிச்சோடியே காணப்படுகின்றன. திற்பரப்பு அருவியிலும் குறைவான எண்ணிக்கையிலேயே சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா்.

மாவட்டத்தில் தற்போது மலைப் பகுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் கடும் வெயில் நிலவுகிறது. இதனால் ஆறுகளில் நீா்வரத்து குறைந்து காணப்படுகிறது. திற்பரப்பு அருவிக்கு வரும் கோதையாற்றில் தண்ணீா் குறைந்த நிலையில் அருவியில் தற்போது மிதமான அளவிலேயே தண்ணீா் கொட்டுகிறது. அதேவேளையில் வெயிலின் தாக்கத்திலிருந்து புத்துணா்ச்சி பெறும் வகையில் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT