கன்னியாகுமரி

விளாத்துறை - விளவங்கோடு ஊராட்சியை இணைக்கும் படகுசவாரி தொடக்கம்

DIN

புதுக்கடை அருகே உள்ள விளாத்துறை, விளவங்கோடு ஆகிய ஊராட்சிகளை இணைக்கும் ஆற்றுக்கடவு படகு சவாரியை குமரி எம்.பி. வ. விஜய்வசந்த் தொடங்கி வைத்தாா்.

முன்சிறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட விளாத்துறை, விளவங்கோடு ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் தாமிரவருணி ஆற்றின் மறுகரைக்கு செல்லவேண்டுமானால் நீண்ட தொலைவு சுற்றி செல்லவேண்டும். இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் குமரி எம்.பி விஜய் வசந்திடம் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து அவரது சொந்த செலவில் படகு வாங்கி மக்கள் பயன்பாட்டுக்கு அளித்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு, விளாத்துறை ஊராட்சி காங்கிரஸ் தலைவா் தாஸ் தலைமை வகித்தாா். முன்சிறை கிழக்கு மற்றும் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா்கள் பால்ராஜ், கிறிஸ்டோபா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். படகு சவாரியை குமரி எம்.பி. விஜய் வசந்த் தொடங்கி வைத்தாா்.

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பினுலால் சிங், அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயலா் ஜோா்தான், விளவங்கோடு ஊராட்சித் தலைவா் லைலா ரவிசங்கா், முன்சிறை வட்டார மகிளா காங்கிரஸ் தலைவி முத்துமலா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT