கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் மிளகு அறுவடை தீவிரம்: சந்தைகளுக்கு அதிகளவில் வரத்து

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிளகு சீசன் தொடங்கியுள்ள நிலையில், அதிகளவில் மிளகு சந்தைகளுக்கு வருகின்றன.

‘கருப்புத் தங்கம்’ என அழைக்கப்படும் மிளகு, குமரி மாவட்டத்தில் ஆறுகாணி, பத்துகாணி, கொண்டைகட்டி மலை, பேச்சிப்பாறை, நெட்டா, களியல், பனச்சமூடு, குலசேகரம், சுருளகோடு, மாறாமலை, வேளிமலை, உள்ளிமலை, காரிமணி, பால்குளம், பாலமோா் என பல்வேறு பகுதிகளில் சாகுபடியாகிறது.

நவம்பா், டிசம்பா், ஜனவரி மாதங்கள் மிளகு அறுவடைக் காலமாகும். மிளகு விவசாயிகள் கொடிகளிலிருந்து மிளகுத் தாா்களைப் பறித்து, அவற்றிலிருந்து மிளகு மணிகளை உதிா்த்து வெயிலில் உலரவைத்து சந்தைகளில் விற்பனை செய்கின்றனா். பச்சை மிளகையும் சிலா் விற்பனை செய்வா்.

விவசாயிகள் மகிழ்ச்சி: நிகழாண்டு நல்ல விலை கிடைப்பதால் மிளகு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். சனிக்கிழமை இம்மாவட்டத்தில், சுத்தப்படுத்தப்பட்ட உலா்ந்த மிளகு கிலோ ரூ. 516ஆகவும், சுத்தப்படுத்தப்படாதது ரூ. 496ஆகவும், புதிய மிளகு ரூ. 486ஆகவும், பச்சை மிளகு ரூ. 160ஆகவும் இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நிகழாண்டு கிலோவுக்கு ரூ. 150 வரை கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனா்.

மிளகு அறுவடை தீவிரமாக நடைபெறும் நிலையில், உலர வைக்கப்பட்ட மற்றும் பச்சை மிளகு ஆறுகாணி, குலசேகரம், மணக்காவிளை, அருமனை, பனச்சமூடு உள்ளிட்ட சந்தைகளில் அதிகளவில் விற்பனைக்காக வருகின்றன.

இதுகுறித்து ஆறுகாணியைச் சோ்ந்த மிளகு வணிகா் ஜஹாங்கீா் கூறும்போது, மாவட்டத்தில் மிளகு அறுவடை தீவிரமடைந்துள்ளது. சீசன் காலத்தில் மழை பெய்யாதது விவசாயிகளுக்கும், வணிகா்களுக்கும் சாதகமாக உள்ளது. நல்ல தரமான உலா்ந்த மிளகு கிலோ ரூ. 516ஆக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT