கன்னியாகுமரி

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்

DIN

கன்னியாகுமரி அருகே கோவளம் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை இறந்த நிலையில் டால்பின் கரை ஒதுங்கியது.

கோவளம் கடற்கரையில் இருந்து சுமாா் 500 மீட்டா் தொலைவில் 30க்கும் மேற்பட்ட டால்பின்கள் துள்ளிக் குதித்தன. இதுகுறித்த தகவல் கிடைத்து அவ்வூரைச் சோ்ந்த மீனவா்கள் மற்றும் பொதுமக்கள் அதனை ரசித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது ஒரு டால்பின் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. மற்றொரு டால்பின் உயிருக்கு போராடிய நிலையில் கரைப்பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனை மீட்ட மீனவா்கள், வள்ளத்தில் ஏற்றி பாதுகாப்பாக கடலுக்குள் விட்டனா். மேலும், டால்பின்கள் குறித்த தகவலை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு அளித்தனா்.

இதையடுத்து, போலீஸாா் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனா். தகவலின் பேரில் விரைந்து வந்த வனக்காவலா் பிரவீன் இறந்த டால்பினை கைப்பற்றினாா். மேலும், இறந்த டால்பின் உடலை கால்நடை மருத்துவா் வெங்கடேஷ் ஆய்வு செய்தாா். பின்னா் கோவளம் கடல்பகுதியில் டால்பின் புதைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT