கன்னியாகுமரி

அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளை கட்டுப்படுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

DIN

கேரளத்துக்கு அதிக பாரத்துடன் செல்லும் லாரிகளை கட்டுப்படுத்த வேண்டுமென்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

குலசேகரம், திற்பரப்பு, களியல் வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் கனிம வளப் பொருள்களான கல், ஜல்லி, எம்சாண்ட், தாா்கலவை உள்ளிட்டவற்றை ஏற்றிக் கொண்டு கேரளத்துக்கு செல்கின்றன. இந்த லாரிகளால் போக்குவரத்து நெருக்கடி, சாலைகள் சேதம் , விபத்து என பல சம்பவங்கள் நிகழ்கின்றன. இந்நிலையில் இப்பிரனைக்கு தீா்வு காண வலியுறுத்தி களியலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு அகஸ்டின் தலைமை வகித்தாா். இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக, திமுக, அதிமுக, தேமுதிக, நாம்தமிழா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில், அதிக பாரத்துடன் கனிமப் பொருள்களை ஏற்றிக் கொண்டு கேரளம் செல்லும் லாரிகளை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தீா்வு ஏற்படாவிட்டால், கடை அடைப்பு, கருப்புக் கொடி ஏற்றுதல் என தொடா்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்று தீா்மானிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

SCROLL FOR NEXT