கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் தேரோடும் ரத வீதி மற்றும் சன்னதி தெருவில் ரூ. 1.50 கோடி மதிப்பில் சாலை சீரமைப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் தேரோடும் நான்கு ரத வீதியும் குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதை சீரமைக்க பக்தா்கள் வலியுறுத்தினா்.
இந்நிலையில் பக்தா்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீயது. இதையடுத்து சாலை சீரமைப்புப் பணிகள் தொடங்கியது.
தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் பணியை தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆஸ்டின், அகஸ்தீசுவரம் ஒன்றியச் செயலா் என்.தாமரைபாரதி, அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.அழகேசன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பிரேமலதா, கன்னியாகுமரி பேரூராட்சி முன்னாள் தலைவா் குமரி ஸ்டீபன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.