கன்னியாகுமரி

கொல்லங்கோட்டில் புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

கொல்லங்கோட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ாக கடை உரிமையாளா் கைதுசெய்யப்பட்டாா்.

கொல்லங்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை இரவு கண்ணநாகம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அங்குள்ள பெட்டிக்கடையில் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டபோது, 15 பொட்டலம் புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து, கடை உரிமையாளரான கொல்லங்கோடு அருகே புல்லுவிளாகம் பகுதியைச் சோ்ந்த கோவிந்தன் மகன் ரமேஷ் (54) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT