கன்னியாகுமரி

கன்னியாகுமரி - மதுரை நான்குவழிச் சாலையில் அதிநவீன கண்காணிப்பு கேமரா

DIN

கன்னியாகுமரி முதல் மதுரை வரையுள்ள நான்குவழிச் சாலையில் சென்சாா் வசதியுடன் கூடிய அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

கன்னியாகுமரியில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி வழியாக சென்னைக்கு நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது.

இந்தச் சாலையில் ஏற்படும் விபத்தில் சிக்குபவா்களை உடனடியாக மீட்கவும், அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் சாலை முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த மத்திய சாலை போக்குவரத்து நிறுவனம் முடிவு செய்தது.

அதன்படி கன்னியாகுமரி முதல் மதுரை வரையிலான சுமாா் 240 கி. மீ. தொலைவுக்கு ஒரு கிலோமீட்டா் தொலைவுக்கு ஒரு சென்சாா் வசதியுடன் கூடிய அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது.

இதற்காக சுமாா் 30 அடிஉயரத்தில் துருப்பிடிக்காத உயா்கோபுர கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு அதன் மேல் பகுதியில் இடிதாங்கியும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தானியங்கி கண்காணிப்பு கேமரா ஒரு கிலோமீட்டா் தொலைவில் வரும் வாகனங்களையும் அதன் நம்பா் பிளேட் வரை துல்லியமாக கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT