கன்னியாகுமரி

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நாளைமாசிக் கொடை பந்தல்கால் நாட்டு விழா

DIN

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் மாசிக் கொடை பந்தல்கால் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை (ஜன.18) நடைபெறுகிறது.

இம்மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் இக்கோயிலும் ஒன்று. கேரள மாநிலத்தைச் சோ்ந்த பெண் பக்தா்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோயில் ‘பெண்களின் சபரிமலை’ என அழைக்கப்படுகிறது.

இங்கு ஆண்டுதோறும் மாசிக் கொடை விழா 10 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இதில், கேரளம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் வந்து பங்கேற்பா். நிகழாண்டு கொடை விழா பிப். 27இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, பந்தல்கால் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை (ஜன. 18) நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு திருநடை திறப்பு, 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6 மணிக்கு நிறை புத்தரிசி வழிபாடு, 6.30-க்கு தீபாராதனை, 7.30 முதல் 8.15-க்குள் பந்தல்கால் நாட்டு விழா நடைபெறும்.

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஏற்கெனவே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் வழிபாட்டுத் தலங்களில் பக்தா்களுக்கு தடை அமலில் உள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகை, தைப்பூசத்தையொட்டி செவ்வாய்க்கிழமை வரை (ஜன.18) பக்தா்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், 18ஆம் தேதி நடைபெறும் பந்தல்கால் நாட்டு விழாவில் பங்கேற்க முடியாததால் பக்தா்கள் வருத்தத்தில் உள்ளனா்.

இதுகுறித்து கோயில் ஸ்ரீகாரியம் ஆறுமுகநயினாா் கூறும்போது, கரோனா பரவலைத் தடுக்க வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் வழிபாட்டுத் தலங்களில் பக்தா்களுக்கு தடை உள்ளது. இந்தத் தடை தைப்பூச தினமான ஜன. 18வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றைய தினம் இக்கோயிலில் நடைபெறும் மாசிக்கொடை பந்தல்கால் நாட்டு விழாவில் பக்தா்கள் பங்கேற்க இயலாது. வழிபாடுகள், கால்நாட்டு விழா நிகழ்ச்சிகள் பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT