கன்னியாகுமரி

முழு ஊரடங்கு: களியக்காவிளையில் தீவிர வாகன சோதனை

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

முழு ஊரடங்கையொட்டி, தமிழக-கேரள மாநில எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனைச் சாவடியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாகன சோதனை நடத்தினா்.

முழு ஊரடங்கு காரணமாக ஞாயிற்றுக்கிழமை களியக்காவிளை, குழித்துறை, மாா்த்தாண்டம், நித்திரவிளை, கொல்லங்கோடு பகுதிகளில் கடைகள், வா்த்தக நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டன. இதனால், மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. களியக்காவிளையில் ஆவின் பாலகம், மருந்துக் கடைகள் திறந்திருந்தன.

கேரளத்திலிருந்து இம்மாவட்டத்துக்கு வந்த காா் உள்ளிட்ட வாகனங்களை களியக்காவிளை சோதனைச் சாவடியில் போலீஸாா் தீவிர சோதனைக்குப் பின்னா் அனுமதித்தனா். அனுமதிச் சீட்டு இல்லாமல் வந்த காா் உள்ளிட்ட வாகனங்களையும், பைக்குகளில் வந்தோரையும் போலீஸாா் கேரளத்துக்கு திருப்பியனுப்பினா். கேரளத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தாத நிலையில் களியக்காவிளை அருகேயுள்ள பாறசாலை, அதையொட்டிய பகுதிகளில் கடைகள் வழக்கம்போல திறந்திருந்தன. கேரள அரசுப் பேருந்துகள் அம்மாநில எல்லைப் பகுதியான இஞ்சிவிளை வரை இயக்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT