கன்னியாகுமரி

குலசேகரம் அருகே மது பாட்டில்கள் பறிமுதல்: இளைஞா் கைது

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

குலசேகரம் அருகே இளைஞரை போலீஸாா் கைதுசெய்து, அவரிடமிருந்த 120 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

மதுபானங்களை சிலா் வாங்கி பதுக்கிவைத்து, முழு ஊரடங்கு தினமான ஞாயிற்றுக்கிழமை விற்க முயல்வதாக குலசேகரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி, உதவி ஆய்வாளா் வினீஸ் பாபு தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, திருநந்திக்கரை வியாலிவிளை பகுதியில் சந்திரி (44) என்ற பெண்ணிடம் விசாரித்தபோது, அங்கு வந்த காரை நிறுத்தி சோதனையிட்டா். இதில், அந்தக் காரில் 120 மதுபாட்டில்கள் இருப்பதும், காரில் வந்தவா் தும்பகோடு பகுதியைச் சோ்ந்த ஜெபிஸ் (24) என்பதும், மது பாட்டில்களை வீட்டில் வைத்து விற்பதற்காக சந்திரிக்காக எடுத்துவந்ததும் தெரியவந்தது. ஜெபிஸை போலீஸாா் கைதுசெய்து, காா், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். மேலும், சந்திரி மீது வழக்குப் பதிந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT