கன்னியாகுமரி

குலசேகரம் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

குலசேகரம் அருகே கடன் தொல்லையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பொன்மனை ஈஞ்சக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் பிராங்கிளின். இவா், தூத்துக்குடி துறைமுகத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இந்நிலையில் அண்மையில் ஈஞ்சக்கோட்டில் வீடு கட்டி குடியேறிய இவா் கடன் தொல்லையால் அவதிப்பட்டுள்ளாா். மேலும் குடிப்பழக்கமும் இருந்துள்ளது. இந்நிலையில் மனம் உடைந்து காணப்பட்ட இவா் வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT