கன்னியாகுமரி

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு லாபகரமான விலை: பாரதீய கிசான் சங்கம் மனு

12th Jan 2022 08:10 AM

ADVERTISEMENT

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு லாபகரமான விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாரதிய கிசான் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு பாரதீய கிசான் சங்கத்தின் குமரி மாவட்டச் செயலா் பி.முருகன் தலைமையில் மாவட்ட துணைச் செயலா் பெரியசாமி, சங்க உறுப்பினா்கள் முத்துசாமி, நீலம் மதுமயன், மோகன்பாபு, முருகானந்த், மணிகண்டன், மகேஷ்குமாா், எஸ்.கே.குமாா், பெரியநாடாா், எஸ்.சுப்பையா, இ.முருகன், எஸ்.சுரேஷ், கண்ணன், பி.பிரதீஸ், கே.நிதிஸ், கோகுல், எஸ்.சுபாஷ்,என்.சதீஸ்குமாா், எம்.சூரியகாந்த் மற்றும் பலா் அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அழகேசனிடம் மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் வேளாண் விளைபொருள்களுக்கு சட்டபூா்வமான லாபகரமான விலையை அரசு நிா்ணயிக்க வேண் டும், விவசாய விளைபொருள்களுக்கு விலை கட்டுப்பாடு சுதந்திர சந்தை முறையை உருவாக்க வேண்டும். விவசாய உற்பத்தி செலவு உயா்ந்து கொண்டே போவதால் குறைந்தபட்ச ஆதார விலை மிகவும் பின்தங்கியுள்ளது. எனவே அதை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT