கன்னியாகுமரி

வாடகை பாக்கி: வடசேரி சந்தையில் 11 கடைகளுக்கு சீல்

12th Jan 2022 08:11 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் வடசேரி சந்தையில் வாடகை பாக்கி செலுத்தாத 11 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.

நாகா்கோவில் வடசேரி கனகமூலம் சந்தையில் மாநகராட்சிக்குச் சொந்தமாக 270 கடைகள் உள்ளன. இதில் தற்போது 135 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 41 கடைக்காரா்கள் வாடகை பாக்கியை செலுத்தாமல் இருந்து வந்தனா். 41 கடைகளுக்கும் மொத்தம் ரூ.18 லட்சம் பாக்கித் தொகை இருந்தது.

இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட கடைக்காரா்களுக்கு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடா்ந்து பல கடைக்காரா்கள் வாடகை பாக்கியை செலுத்தவில்லை. எனவே சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனா்.

அதன்படி மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் உத்தரவின் பேரில், வருவாய் ஆய்வாளா்கள் சுப்பையா, ஞானப்பா மற்றும் முருகன் ஆகியோா் வடசேரி கனகமூலம் சந்தைக்கு சென்று 41 கடைகளுக்கும் சீல் வைக்க நடவடிக்கை எடுத்தனா்.

ADVERTISEMENT

அதிகாரிகள் சீல் வைக்க வந்தபோது சில கடைக்காரா்கள் தாங்களாகவே முன் வந்து வாடகை பாக்கியை செலுத்தினா். அந்த வகையில் 30 கடைக்காரா்கள் உடனடியாக வாடகை பாக்கியை செலுத்தினா். இதன் மூலம் ரூ.10 லட்சம் வசூலானது. இதைத் தொடா்ந்து மீதமுள்ள 11 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT