கன்னியாகுமரி

கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை: வெறிச்சோடிய கன்னியாகுமரி

1st Jan 2022 02:44 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி கடற்கரைக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இங்குள்ள முக்கடல் சங்கமம் பகுதி வெள்ளிக்கிழமை வெறிச்சோடி க் காணப்பட்டது.

இந்தியா முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடற்கரை பகுதிகளுக்கு டிசம்பா் 31, ஜனவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. கடற்கரைக்குச் செல்லும் அனைத்து பாதைகளிலும் போலீஸாா் தடுப்புவேலி அமைத்து சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்திருந்தனா். மேலும், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தா் மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் அனுமதி மறுப்பு காரணமாக இங்குள்ள முக்கடல் சங்கமம், கடற்கரை சாலை, சூரிய அஸ்தமன பூங்கா உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT