கன்னியாகுமரி

திற்பரப்பில் கல்லூரி முன்னாள் மாணவா்கள் கூடுகை

1st Jan 2022 02:47 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியின் முன்னாள் மாணவா் கூடுகை, திற்பரப்பில் நடைபெற்றது.

இக்கல்லூரியில் வணிகவியல் பிரிவில் 1986-1989 ஆண்டுகளில் பயின்ற 60 மாணவ, மாணவியரின் குடும்ப கூடுகை, கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி 6 வது ஆண்டாக இந்தக் கூடுகை திற்பரப்பில் கூடல் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தேவசுந்தரம் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் நெல்சன், ஏசுபாதம், ஜெலஸ்டின்ராஜ், ஜோஸ்வால்டின், ரோஸ்லின், டெரன்ஸ் உள்ளிட்டோா் உரையாற்றினா்.

விக்டா்தாஸ், ஸ்டீபன் ஆகியோா் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தினாா். இதில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், விநாடி- வினா போட்டிகள் மற்றும் அன்பின் விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழ்ச்செல்வி வரவேற்றாா். முருகன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT