கன்னியாகுமரி

குலசேகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் மேளா

1st Jan 2022 02:46 AM

ADVERTISEMENT

குலசேகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வியாழக்கிழமை கடன் மேளா மற்றும் புதிய உறுப்பினா் சோ்த்தல் முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் ஜே. மோகன்தாஸ் தலைமை வகித்தாா். செயலா் ஜி. நந்தினி முன்னிலை வகித்தாா். மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளா் ஜி. சுரேஷ், வட்ட மேற்பாா்வையாளா் குமாா் ஜெயசிங், சங்க துணைத் தலைவா் என். நடராஜன், உறுப்பினா் எஸ். எபனேசா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் 95 பேருக்கு புதிய உறுப்பினா் விண்ணப்பம் மற்றும் கடன் விண்ணப்பம் வழங்கப்பட்டது. இந்த சங்கத்தில் இதுவரை விவசாய கடன் ரூ. 1 கோடி 97 லட்சமும், சுய உதவிக்குழு கடன் ரூ. 14 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT