கன்னியாகுமரி

குலசேகரம் பேரூராட்சியில் பாஜக, காங்கிரஸ் தலா 6 இடங்களைப் பிடித்தன

22nd Feb 2022 11:55 PM

ADVERTISEMENT

குலசேகரம் பேரூராட்சியில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா 6 வாா்டுகளில் வெற்றி பெற்றன.

இந்தப் பேரூராட்சியிலுள்ள 18 வாா்டுகளில், திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டணியாக போட்டியிட்டன. இதரக் கட்சிகள் தனியாக களம் கண்டன. இதில் பாஜக 6, காங்கிரஸ் 6, திமுக 4, மாா்க்சிஸ்ட் 1, சுயேச்சை 1 என வெற்றி பெற்றன.

வாா்டு வாரியாக வெற்றி பெற்றவா்கள் விபரம்: 1 ஆவது வாா்சு எட்வின் ராஜ் (காங்கிரஸ்), 2 தங்கப்பன் (பாஜக), 3 ராதா தங்கராஜ் (பாஜக), 4 மேரி ஸ்டெல்லா (காங்கிரஸ்), 5 ரெத்தினபாய் (திமுக), 6 லதா பாய் (திமுக), 7 ஜெயந்தி (காங்கிரஸ்), 8 ஏஞ்சல் ஜெனி (காங்கிரஸ்), 9 சிவகுமாா் (பாஜக), 10 அமல்ராஜ் (சுயே), 11 ராஜையன் (பாஜக), 12 கண்ணன் (பாஜக),

13 சந்தோஷ் (பாஜக), 14 ஜோஸ் எட்வா்ட் (திமுக), 15 ரபீக்கா (காங்கிரஸ்), 16 ராகிலா பீவி (காங்கிரஸ்), 17 தமிழ்ச்செல்வி (திமுக), 18 சுபாஷ் கென்னடி (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்).

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT